சிறிலங்கா இராணுவத்துடன் முரண்பட்ட ஊடகவியலாளர்கள் (படங்கள்)
இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியை குழப்பும் வகையில் சிறிலங்கா இராணுவம், புலனாய்வுத் துறையினர், தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் எனப் பலர் சதித் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்த இராணுத்தினர்
நேற்றைய தினம், மட்டக்களப்பு நகரை நோக்கி எழுச்சிமிக்க பேரணி வந்து கொண்டிருந்தபோது மட்டக்களப்பு சந்திவெளி இராணுவ முகாமில் உள்ள இராணுத்தினர் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்த போது இராணுவத்தினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
போராட்டங்கள் இடம்பெறுகின்ற போது அரச புலனாய்வுத் துறையினரும் இராணுவத்தினரும் ஊடகவியலாளர்களது புகைப்படங்களை எடுத்து அவர்களது கடமைக்கு இடையூறு கொடுக்கும் வகையில் செயற்பட்டு வந்த வரலாறுகள் இருந்த வண்ணமே இருக்கின்றது.
நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்த இராணுவத்தினரிடம் எதற்காக புகைப்படம் எடுக்கின்றீர்கள், குழப்பும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் எழுச்சிமிக்க பேரணியானது மட்டக்களப்பு மண்ணில் மிகப் பிரமாண்டமான முறையில் எழுச்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
