இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் அவுஸ்திரேலியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய இலங்கை தமிழ் குடும்பம் தொடர்ந்தும் விசா விண்ணப்பிப்பதற்கு தடைவிதித்து அவுஸ்திரேலிய குடியேற்ற விவகார அமைச்சர் Alex Hawke வெளியிட்ட உத்தரவு சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தினரான நடேசலிங்கம், பிரியா முருகப்பன் மற்றும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கி இருக்க அனுமதி கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணை முடிவில், இநத குடும்பத்தினர் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என, அவர்களின் சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளின் போது வாதங்களை முன்வைத்திருந்தனர்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இந்த குடும்பத்தை சேர்ந்த கணவனும் மனையும் அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்துக்கொண்டதுடன் அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அங்கு பிறந்தன.
கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த போது இவர்களின் இளைய மகள் கடந்த ஆண்டு சுகவீனமுற்றதன் காரணமாக பேர்த்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இவர்களின் விசா சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
