ஜனாதிபதி அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayaka) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie J. Chung) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமை
குறித்த பதிவில் “இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அமெரிக்கா தனது வாழ்த்துக்ளை தெரிவிக்கின்றது.
இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்கு நாமும் வாத்துகிறோம்.” என்றும் அவர் கூறிள்ளார்.
The United States congratulates President-elect Anura Kumara Dissanayake (@anuradisanayake) on his victory in Sri Lanka’s presidential election. We also congratulate the Sri Lankan people for peacefully exercising their democratic rights. We value the strong U.S.-Sri Lanka…
— Ambassador Julie Chung (@USAmbSL) September 22, 2024
நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக களமிறங்கிய அநுர குமார திஸாநாயக்க 5,634,915 - 42.31 4%4 வாக்குகளை இலங்கையின் புதிய நிரறவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |