பொய்யை பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் -அமெரிக்க தூதுவர் வருத்தம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தூதுவர், "புனைகதையாகக் கருதப்பட வேண்டிய புத்தகம்" மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய்யைப் பரப்பியதற்காக வருந்துவதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா தனது 75 ஆண்டுகால வரலாற்றில்
I am disappointed that an MP has made baseless allegations and spread outright lies in a book that should be labeled “fiction.” For 75 years, the US & SL have shared commitments to democracy, sovereignty, and prosperity - a partnership and future we continue to build together.
— Ambassador Julie Chung (@USAmbSL) April 26, 2023
மேலும், அமெரிக்கா தனது 75 ஆண்டுகால வரலாற்றில் இலங்கையின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழுமைக்காக மேற்கொண்ட தியாகங்களை தொடர்ந்தும் பராமரித்துச் செல்லும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றையதினம் தான் எழுதியதாக தெரிவித்து இரண்டு புத்தகங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
