இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - பிரித்தானியாவில் இருந்து அழுத்தம்
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இன்றைய புனித நாளின் நினைவுகளோடு தமிழ்ச் சமூகம் தன்னை ஒருநிலைப்படுத்தியிருக்கும் வேளையில், பலிகொள்ளப்பட்ட தமிழர்களுக்கும், உயிர் பிழைத்தோருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிட்ட வேண்டும்.
https://www.youtube.com/watch?v=dXfGXxgmWCU
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையரின் பரிந்துரைக்கு அமைய சர்வதேச நீதிப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
Today, I want to reaffirm Labour’s commitment to securing justice for Tamil victims who lost their lives, survivors, and their families.
— Keir Starmer (@Keir_Starmer) May 18, 2023
The government must consider the UN High Commissioner for Human Rights' recommendation for an international justice mechanism. https://t.co/WTLMi1aKxR
