கொலை மிரட்டலால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நீதிபதி சரவணராஜா: கிளிநொச்சியில் போராட்டம் (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து இன்று தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்று வருகின்றது.
இந்த போராட்டம் கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்று வருகிறது.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் : சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
பதவி விலகல் கடிதம்
அதேவேளை சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா அவரது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் இவ்வாரண கொலை அச்சுறுத்தல்களை வழங்கப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினர் இவ் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |


