யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடவுள்ள நீதவான்!
Jaffna
Sri Lanka
By Harrish
யாழ்ப்பாணம்(Jaffna) - செம்மணிப் பகுதியில் உள்ள மயானத்தில் கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட குழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் யாழ். நீதிமன்ற நீதவான் கள விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை (13) கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், குறித்த மயானத்தின் நிர்வாக உறுப்பினருமான கிருபாகரன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி
இந்நிலையில், காவல்துறையினர் குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன்படி, நாளையதினம் (20.02.2025) பிற்பகல் 3.00 மணிக்கு குறித்த பகுதியை நீதவான் பார்வையிடவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி