ரணில் அரசாங்கத்திற்கு ஜே.வி.பி விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால்தான் மக்கள் போராட்டத்திற்கு இறங்கினர்.
இந்நிலையில் அவர்கள் தற்போது வேட்டையாடப்படுகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.
தற்போதைய அரசாங்கம் பலவீனம்
வலுவான அரசுகள் போராட்டங்களுக்கு அஞ்சுவதில்லை. தற்போதைய அரசாங்கம் பலவீனமாக இருப்பதால்தான், சிறு எதிர்ப்புகளுக்குக்கூட அஞ்சுகின்றது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பெருமளவான இலங்கையர்கள் இது குறித்த முறைப்பாடுகளை முன்வைப்பார்கள். பேரவையின் கவனத்தை ஈர்க்க நாமும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற விரிவான செய்திகளை காண்பதற்கு மதியநேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

