கபில சந்திரசேன மரண வழக்கு: FBI வசம் ஒப்படைக்கப்படும் கைப்பேசி

Sri Lanka Police Law and Order Kapila Chandrasena
By Shalini Balachandran Jun 02, 2026 12:35 PM GMT
Report

சிறிலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த விசாரணையில் 19 ஆவது மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவைக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து கடந்த மாதம் (08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

சாட்சிகளுக்கு அழைப்பாணை

இந்த நிலையில், கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பாசன் அமரசேன, இன்று (02-06-2026) இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

கபில சந்திரசேன மரண வழக்கு: FBI வசம் ஒப்படைக்கப்படும் கைப்பேசி | Kapila Chandrasena Death Case Court Updates

அத்தோடு, உயிரிழந்தவரின் கைப்பேசியை FBI வழியாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கொழும்பு குற்றப்பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சை நிறப் பட்டியை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் இன அழிப்பின் இருளில் எரிந்த ஆகுதி தீபங்கள்! தழல் ஈகங்களின் தடம்

தமிழ் இன அழிப்பின் இருளில் எரிந்த ஆகுதி தீபங்கள்! தழல் ஈகங்களின் தடம்

நீதிமன்றத்தில் முன்னிலை

சாட்சிச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரகாரமும் உயர் நீதிமன்றச் சட்ட இலக்கம் 31 இன் விதிகளின் பிரகாரமும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அல்லது அவரது சாட்சிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட எழுத்துமூல அல்லது வாய்மூல விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் எனத் தீர்மானித்ததாக நீதவான் தனது உத்தரவின் போது தெரிவித்துள்ளார்.

கபில சந்திரசேன மரண வழக்கு: FBI வசம் ஒப்படைக்கப்படும் கைப்பேசி | Kapila Chandrasena Death Case Court Updates

இதனடிப்படையில் 19 ஆவது மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணைகளை வழங்கிய நீதிபதி, அவ்விரு சாட்சிகளையும் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகிச் சாட்சியமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய மேலதிக விசாரணைக்காக வழக்கை ஐந்தாம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ருவாண்டா அகதிகள் ஒப்பந்த வழக்கில் பிரித்தானியாவிற்கு கிடைத்த வெற்றி!

ருவாண்டா அகதிகள் ஒப்பந்த வழக்கில் பிரித்தானியாவிற்கு கிடைத்த வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026