கபில சந்திரசேனவின் மரணம் : நாமலின் அரசில் முறையான விசாரணையாம்
Johnston Fernando
Namal Rajapaksa
Kapila Chandrasena
By Jaso
கபில சந்திரசேனவின் மரணம் குறித்து வலுவான சந்தேகம் நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
நீதி வழங்கப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை
காவல்துறையும் சுயாதீன ஆணைக்குழுக்களும் தற்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போதைய அமைப்பில் நீதி வழங்கப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர்களை வெளியிடுமாறு கபில சந்திரசேனவுக்கு இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் அழுத்தம் கொடுத்து கட்டாயப்படுத்தியதாக ஒரு பிரமாணப் பத்திரம் வெளிப்படுத்தியுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி