கபில ஐ-போன் & ஈ-மெயில் அன்லொக் - மகிந்தவுக்கு திக்திக்..!
சிறிலங்காவின் விமான போக்குவரத்து வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியில் கைமாறப்பட்ட பெரும் பணத்தின் மர்மங்களை விலக்கும் நகர்வுகள் இப்போது அமெரிக்காவின் எப்.பி.ஐ மற்றும் ஐபோன் அப்பிள் நிறுவங்களின் உதவியுடன் தீவிரமடைகின்றன.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில சந்திரசேன கடந்த 8 ஆந்திகதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டநிலையில் அவரை சுற்றிய மோசடிகளின் முதற்கட்டமாக கைமாறப்பட்ட 2 மில்லியன் டொலர் இலஞ்சப் பணம் இறுதியில் எங்கு சேர்ந்தது என்பதை கண்டறிய இப்போது தீவிர முயற்சிகள் எடுக்கப்படுவது நிச்சயமாக மகிந்த உட்பட்ட தலைகளுக்கு நல்ல செய்தி அல்ல.
சிறிலங்கா உட்பட சில நாடுகளில் 2008 க்கும் 2015-க்கு இடையில், இடைப்பட்ட காலத்தில் தனது விமானங்களை விற்பதற்காக மூன்றாம் தரப்பு போலி நிறுவனங்களை பயன்படுத்தி இலஞ்சம் வழங்கிய விடயத்தை கடந்த 2020 இல் பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் எயார்பஸ் நிறுவனமே ஒத்துக்கொண்டு அந்த குற்றத்துக்கான 4 பில்லியன் டொலரை அபராதமாகவும் செலுத்த ஒப்புக்கொண்ட நிலையில் சிறிலங்காவின் பங்கில் பெறப்பட்ட லஞ்ச மர்மத்தை விலக்க இடம்பெறும் நகர்வுகள் இனி இந்த லஞ்சப் பணம் இறுதியாக சேர திட்டமிடப்பட்ட முகங்கள் ராஜபச்ச முகங்கள் என கண்டறியப்பட்டால் சில சம்வங்கள் இடம்பெறக்கூடும் என்பதால் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |