சிகிச்சைக்கு சென்ற சிறுமி வன்புணர்வு- தலைமறைவான வைத்தியர் சரணடைந்தார்
Sri Lanka Police
Sexual harassment
Sri Lanka Police Investigation
Child Abuse
By Jaso
சிறுமி வன்புணர்வு
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வைத்தியர் இன்று காலி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாககாவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைமறைவான வைத்தியர்
வைத்தியசாலையின் ஸ்கான் அறையில் வைத்தியரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் தாக்கல் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றம் கடந்த 8ம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வைத்தியரை கைது செய்ய தேடப்பட்டு வந்த நிலையில், இன்று வரை பல நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி