துரோகத்தின் எதிரொலி: கருணாவின் பிரிவால் புலிகளுக்கு கிட்டிய வெற்றி
விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Karuna Amman) விலகி கிட்டத்தட்ட வெறும் பத்து நாட்களில் அவர் தனித்து விடப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் (Niraj David) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கருணாவின் பிளவை அடுத்து விடுதலை புலிகள் பெற்ற வெற்றி என்றால், சில நாட்களில் கருணா தனித்து விடப்பட்டார்.
இதையடுத்து, கருணாவின் பக்கத்தில் இருந்த அத்தனை தளபதிகளும் அதாவது முக்கியமான தளபதிகளும் அவரை விட்டு விலகிவிட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கருணா பிளவின் பிண்ணனி, அப்போதைய அமெரிக்க உளவுத்துறையின் ஆய்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய சக்கர வியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்