இந்தியாவை உலுக்கிய கரூர் சம்பவம்: பாதிக்கப்பட்டோரை சந்தித்தார் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) சந்தித்துள்ளார்.
கரூரில் கடந்த மாதம் செப்டம்பர் 27 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல்
இந்தநிலையில், நேற்று (27) உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாக விஜய் சந்தித்துள்ளார்.

இதன்போது அவர், குடும்ப உறுப்பினர்களிடம் தனித்தனியாக மன்னிப்பு கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் எனவும் நிச்சயம் கரூர் வந்து உங்களை சந்திப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை மனு
வாழ்நாள் வரை நான், உங்கள் குடும்பத்தின் ஒருவனாக உங்களுடன் இருப்பேன் எனவும் உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன் எனவும் விஜய் உறுதியளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என அவர் வாக்குறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விஜயிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ள நிலையில் அந்த மனுவை பெற்றுக்கொண்ட விஜய் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்