இந்தியா - இலங்கை இடையே புதிய கப்பல் பாதை : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் (Sarbananda Sonowal), இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவுடன் (Anura Karunathilaka) இது தொடர்பில் இருதரப்பு சந்திப்பை நடத்தியுள்ளார்.
கடல்சார் இணைப்பு
புதிய கப்பல் பாதையைத் தொடங்குவதன் மூலம் இந்தியா - இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்பதற்காக ஒக்டோபர் 27 முதல் 28 ஆம் திகதி வரை அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்