வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலையில் திடீர் திருப்பங்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order Lasantha Wickramasekara
By Kanooshiya Oct 28, 2025 07:05 AM GMT
Report

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும்“மிதிகம லசாவின்” கொலை துபாயை தளமாகக் கொண்ட குற்றவாளிகளால் திட்டமிடப்பட்டதை காவல்துறை விசாரணைகளில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான 'மிதிகம சூட்டி', இந்தக் கொலைச் சதியில் முக்கிய நபராக காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள 'மிதிகம சூட்டி' என்பவர் கடந்த ஜூன் மாதம் ஓமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், இந்த கொலையில் எவ்வாறு தொடர்புபட்டிருப்பார் என்பதில் காவல்துறையினருக்கு பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு...! மற்றுமொரு நடிகையிடம் CID விசாரணை

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு...! மற்றுமொரு நடிகையிடம் CID விசாரணை

ஓமான் காவல்துறை

ஓமான் காவலில் இருந்தபோது இந்தக் கொலைச் சதித்திட்டத்திற்கு அவர் பயன்படுத்திய பல தொலைபேசி எண்கள் பற்றிய தகவல்களும் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள நிலையில் இன்டர்போல் மூலம் குறித்த தொலைப்பேசி எண்களை ஓமானுக்கு அனுப்பி மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலையில் திடீர் திருப்பங்கள் | Weligama Pradeshiya Sabha Chairman Murder

வெலிகம பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய துபாயில் உள்ள 'ரஜித' மற்றும் 'துபாய் லொக்கா' என அழைக்கப்படும் இரண்டு நபர்கள் துப்பாக்கிதாரியை வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

அவர்கள் பல கையடக்க தொலைபேசி எண்களை பயன்படுத்தி, துப்பாக்கிதாரி கொலையை எவ்வாறு செய்வது, தப்பிக்கும் வழிகள் மற்றும் மறைந்துக் கொள்ள வேண்டிய இடங்கள் தொடர்பில் படிப்படியாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

வழிக்காட்டுதல்

கொலை இடம்பெற்ற தினத்தன்று காலையில், துபாயிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி, துப்பாக்கிதாரி வெலிகமவில் உள்ள பாலமொன்றின் அருகே சென்று அடையாளம் தெரியாத நபரொருவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலையில் திடீர் திருப்பங்கள் | Weligama Pradeshiya Sabha Chairman Murder

பத்து நிமிடங்களுக்குள், அவர் பிரதேச சபைக்குச் சென்று லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு துப்பாக்கியை பெற்றுக் கொண்ட இடத்திலேயே மீள ஒப்படைத்துள்ளார்.

இவ்விடயம் கொலை பல நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு மேற்கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த 'ரஜித' மற்றும் 'துபாய் லொக்கா' ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குற்றங்களைச் செய்யும் முக்கிய பாதாள உலகத் தலைவர்களின் பட்டியலில் இன்னும் பதிவு செய்யப்படாத நபர்கள் என்பது புலனாய்வுத் துறைகளின் அவதானத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்..! ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தகவல்

செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்..! ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தகவல்

லசந்த விக்ரமசேகர கொலை... சந்தேக நபர் பகிரங்க விசாரணை : எழுந்துள்ள கண்டனம்

லசந்த விக்ரமசேகர கொலை... சந்தேக நபர் பகிரங்க விசாரணை : எழுந்துள்ள கண்டனம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்