கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சியில் அண்மையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.
தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை.
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல.
கடற்றொழிலாளர் பிரச்சினைகள்
மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கே இருதரப்பு கலந்துரையாடல்களில் முன்னுரிமை வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20