புற்று நோய்க்குள்ளான இளவரசி கேட்: ஆதரவாக குரல் கொடுக்கும் பிரித்தானிய தரப்பு
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு்ள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக புற்றுநோயில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இளவரசி கேட் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, இளவரசி தைரியமாக தனது குழந்தைகளுக்கு அதனை தெரிவித்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புற்றுநோயில் இருந்து தப்பியவர்கள் கேட்டுக்கு தங்கள் ஆதரவைக் காட்டியுள்ளனர்.
இளவரசி டயானாவின் சகோதரர்
இந்நிலையில் கேட் மிடில்டனின் காணொளி தொடர்பில் தற்போது இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
''அதில் நம்பமுடியாத துணிச்சல் மற்றும் எதிர்கொள்ளும் மனநிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.''
கேட்டிற்கு வாழ்த்துகள்
சமூக ஊடகங்களில் தாய்மார்கள், தந்தைகள் 'தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றுவது' மற்றும் 'தாக்கத்தின் மீது உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது போன்ற உணர்வு' ஆகியவற்றைப் பற்றி வெளிப்படையாக கதைத்திருந்தனர்.
இதன்போது,பெண்ணொருவர் தனது பதிவில், ''எனக்கு புற்றுநோய் இருந்தபோது, நான் ஒரு இளம் குழந்தையின் இளம் தாயாக இருந்தேன். அது உடைத்தது. கேட்டிற்கு வாழ்த்துகள்'' என்றார்.
இன்னும் சிலர், இத்தகைய சூழலில் குழந்தைகளுடன் பேசுவது எவ்வளவு கடினமானது என்று கருத்து தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |