விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுபாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக பாதுகாப்பு பிரதானிகளால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயர் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த புதிய வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
முப்படைத் தளபதிகள், காவல்துறை மா அதிபர்கள், புலனாய்வுத் தலைவர்கள், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத் தலைவர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அங்கு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையம் ஊடாக எவ்வாறு பதுங்கிச் செல்கின்றனர் என்பதை புலனாய்வு பிரிவின் தலைவர்கள் விபரித்துள்ளனர்.
இந்த தகவல்களை சுட்டிக்காட்டிய பின்னர், குடிவரவு முனையங்களுக்கு மக்கள் வரும் வரிசைக்கு ஏற்ப குறித்த முனையங்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்.