கட்டுநாயக்காவில் விமான கட்டணங்களை விடவும் அதிகரித்த வாகன கட்டணங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வாகன கட்டணம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வாகன கட்டணம் வெளிநாட்டுக்கு செல்வதற்கு விதிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை விட அதிகம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்ல 76,300 ரூபா வாகன கட்டணம். அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான வாகன கட்டணம் 73,000 ரூபாவாகும்.
இது தவிர, இந்த வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்தால், அந்த கட்டணங்களும் இந்த வாகனங்களின் கட்டணத்துடன் சேர்க்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் விமானக் கட்டணம்
ஆனால் குறைந்த கட்டணத்தில் விமானக் கட்டணத்தை வசூலிக்கும் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள், இந்தியாவுக்குச் செல்ல ஒரு பயணிக்கு இந்த கட்டணத்தில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே வசூலிக்கின்றன.
மேலும், சில மாதங்களுக்கு முன் இலங்கை மற்றும் பஹ்ரைன் இடையே நேரடி விமான சேவையை தொடங்கிய விஸ் ஏர் நிறுவனம், ஒரு விமானத்திற்கு ஒரு பயணிக்கு 11,000 ரூபாய் வசூலிக்கின்றது.
