கட்டுநாயக்காவில் கெஹெல்பத்தர பத்மேவிற்கு ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம்
கட்டுநாயக்காவில் நேற்று இரவு தரையிறங்கிய கெஹெல்பத்தர பத்மே, அண்மையில் தன்னால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரியை நேருக்கு நேர் கண்டதும் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றக்கும்பல் தரையிறங்கிய நேரத்தில் மேல் மாகாண வடக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தலைமை காவல்துறை பரிசோதகர் லிண்டன் டி சில்வாவும் விமான நிலைய வளாகத்தில் இருந்தார்.
இதன்போது உயிர் அச்சுறுத்தலை விடுத்த குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவும், காவல்துறைஅதிகாரியான லிண்டன் டி சில்வாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மேவும் கமோண்டோ சலிந்தவும் அதிர்ச்சி
குறித்த சந்தர்ப்பத்தில் காவல்துறைஅதிகாரியை பார்த்த கெஹெல்பத்தர பத்மேவும் அவரது கூட்டாளியான கமோண்டோ சலிந்தவும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் லிண்டன் டி சில்வா, பத்மேவை அணுகிய நிலையில் அவரை பார்த்து இவ்வாறு உரையாடியிருந்தார்.
லிண்டன் டி சில்வா - ஆஹ் ....... தம்பி..... நாம் சந்தித்துவிட்டோம் அல்லவா.... என கூறியுள்ளார்.
பத்மே - மன்னித்து விடுங்கள் சார்... நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.
லிண்டன் டி சில்வா - "நாங்கள் பின்னர் சந்திப்போம், சகோதரரே..."
இவ்வாறு இருவருக்கும் இடையிலான உரையாடல் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றவாளிகள் நேற்று இரவு 9.15 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
தனித்தனியாக விசாரணை
அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளான மண்டினு பத்மசிறி பெரேரா அல்லது கெஹல்பத்தர பத்மே, நிலங்க சம்பத் சில்வா அல்லது பாணதுர நிலங்க மற்றும் ஷாலிந்த மதுஷன் பெரேரா அல்லது கமாண்டோ சாலிந்த ஆகியோர் தனித்தனியாக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் மூன்று புலனாய்வுப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளான லஹிரு மதுசங்க அல்லது தம்பரி லஹிரு மற்றும் என்.என். பிரசங்க அல்லது பாக்கோ சமன் ஆகியோர் மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் இயக்குனர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல தலைமையிலான மேற்கு வடக்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, இருவரும் பின்னர் கொழும்பு துறைமுக காவல்துறைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.
[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
