பாதிரியாரை நம்பி உயிரை விட்ட கென்ய மக்கள்! தோண்டத் தோண்ட உடல்கள்
கென்யாவில் கிறிஸ்தவ பாதிரியாரை பின்பற்றி, சொர்க்கம் போவதற்காக பட்டினி இருந்து 47 பேர் உயிரை விட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்துள்ளது.
இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்டத் தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனரென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் மெக்கன்சி
இந்தச் சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்.
இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த குழுவினரிடம் கூறப்பட்டுள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து இறந்துள்ளனர். இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
காவல்துறையினரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்து விட்டார்.
உடல்களை மீட்கும் பணி
இதுவரை இதுபோன்று 47 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து 800 ஏக்கர் வனப் பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், காவல்துறையினரின் விசாரணை நடந்து வருகிறது.
