கேரளாவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்! ஒருவர் பலி : 25 இற்கும் அதிகமானோர் படுகாயம்
கேரளா - எர்ணா குளம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதோடு 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று(29) காலை 9 மணியளவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இந்தச்சம்பவம் பதிவாகியுள்ளது.
#WATCH | Visuals from Ernakulam, Kerala where one person died, and several injured in an explosion at a Convention Centre in Kalamassery https://t.co/hir8k808v2 pic.twitter.com/305HuzA4gg
— ANI (@ANI) October 29, 2023
2000 ற்கும் மேற்பட்டவர்கள்
கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நாளான இன்று கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றுள்ளது.
கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு பங்கேற்றிருந்த இக் கூட்டத்தில் 2000 ற்கும் மேற்பட்டவர்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர். எல்லோரும் ஜெப கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
தீவிர சிகிச்சை
இதனையடுத்து அங்குள்ள பொருட்கள் தீப் பிடித்து எரிந்த நிலையில் ஜெபக்கூட்டத்தில் இருந்த அனைவரும் சிதறி ஓடியுள்ளார்கள்.
காயமடைந்தவர்களை கொச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கேரள பகுதி பெரும் பரபரப்படைந்து காணப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.