யாழில் மீட்கப்பட்ட 42kg கேரள கஞ்சா!
யாழில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா உட்பட்ட பல சட்டவிரோத போதைப்பொருட்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர்.
அந்தவகையில் பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42kg கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் குறித்த கஞ்சா பொதி நேற்று (23) கைப்பற்றப்பட்டது.
கைது நடவடிக்கை
சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போது படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல்க்காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் கடலுக்குள் படகு மற்றும் கஞ்சாவுடன் தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரி திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.