எதிர்வரும் நாட்களில் கைதாகபோகும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகள்
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளின் ஒருபகுதியாக எதிர்வரும் நாட்களில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விசாரணைகளை திசை திருப்பும் நோக்கத்துடான திட்டங்களை சில தரப்புக்கள் வகுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை மையப்படுத்தி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சதிதிட்டங்கள் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட விவாதம்
குறிப்பாக, வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் இத்தகைய சம்பவங்களைப் பயன்படுத்தி நாட்டில் அமைதியின்மையை உருவாக்க பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய பின்னணி முயற்சிகள் குறித்துப் பாதுகாப்புத் தரப்பினரும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |