அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல்! மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்
இந்தியாவிலுள்ள ( INDIA) அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த குர்பெத்வந்த் சிங் பனு மிரட்டல் விடுத்துள்ளார்.
குர்பெத்வந்த் சிங் பனு என்பவரால் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள இந்தியா குர்பெத்வந்த் சிங் பனுவையும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
கனடா இந்தியா மோதல்
காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்காத நிலையில் கடந்த ஓராண்டாக இந்தியா – கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமர் கோவில் மீது தாக்குதல்
இந்த தாக்குதல் தொடர்பாக காணொளி வெளியிட்ட குர்பெத்வந்த் சிங் பனு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான கடவுள் ராமர் கோவில் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் 16 மற்றும் 17ம் திகதிகளில் அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வரும் 18ம் திகதி ராம் விவாக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்க உள்ள ழ்நிலையில் அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் தற்போது இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |