வெளிநாடொன்றிலிருந்து அதிகளவில் வரும் தமிழர்கள் : சேவையை அதிகரித்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்
SriLankan Airlines
Australia
Melbourne
By Jaso
கொழும்புக்கும் மெல்பேர்னுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க சிறி லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அந்தநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்களின் பயணத் தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் மூன்று நாட்கள் சேவை
இந்த புதிய அட்டவணை எதிர்வரும் ஓகஸ்ட் 02 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.தற்போதுள்ள தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக, வாரத்தில் மூன்று நாட்கள் புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

கொழும்பிலிருந்து பிற்பகல் 14:10 மணிக்கு புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை 04:30 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும். மெல்பேர்னில் இருந்து காலை 06:00 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்