முடிந்தால் செய்து காட்டுங்கள்... ட்ரம்ப்புக்கு ஈரான் தலைவர் விடுத்த நேரடி சாவால்!
ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழிநடத்தட்டும் என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் துணை நிற்பேன் என ட்ரம்ப் தெரிவித்து வருகின்றார்.
இந்தநிலையில், ஈரான் அரசு எதைச் செய்தாலும் விமர்சிக்கும் ட்ரம்ப், அவ்வளவு திறமையானவராக இருந்தால் ஈரானை ஆட்சி செய்யட்டும் என அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம்
ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களில் பொருளாதாரச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அன்றாட செலவே அதிகரித்து காணப்படுவதால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அத்தோடு, 1979 ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் போராட்டம்
ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 22 மாகாண மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் எதிரொலியாக இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மக்கள் குரலை முடக்கும் வகையில் ஈரான் அரசு செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது.
இதனடிப்படையில், தலைநகரான டெஹ்ரானில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அங்கு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |