உக்ரைனில் போர் விவகாரம்..! கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய விதம் (காணொளி)
உக்ரைனில் போரில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றது.
உக்ரைனிய படைகளின் தீவிர தாக்குதல் மற்றும் ரஷ்ய போர் வீரர்களின் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக கெர்சன் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனால் உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 5 மணிக்கு ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்பட்டன.
#Russian occupiers leave #Kherson. pic.twitter.com/TlozMjhlWo
— NEXTA (@nexta_tv) November 11, 2022
ரஷ்யாவின் ஒற்றை பகுதி
கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய காணொளி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி கொள்ளப்பட்டாலும், அது ரஷ்யாவின் ஒற்றை பகுதி என ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

