கிளிநொச்சியில் நேற்றிரவு விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி
Kilinochchi
Sri Lanka
By Harrish
முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்றிரவு (05.01.2025) இடம்பெற்றுள்ளது.
பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது மோதி நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியது.
விபத்து சம்பவம்
இந்நிலையில், விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது.
மேலும், அந்த நோயாளர் காவு வண்டி தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மற்றுமொரு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி