தமிழர் பகுதிக்கு இரகசியமாக வந்த அமைச்சர்: விவசாயிகள் ஆதங்கம்!

Kilinochchi Douglas Devananda S. Sritharan Ministry of Agriculture
By Laksi Mar 27, 2024 10:00 AM GMT
Report

விவசாய அமைச்சர் கிளிநொச்சி வந்து சென்றமை தமக்கு தெரியாது என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று(27) காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்! இறுதி தீர்மானம் இன்று

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்! இறுதி தீர்மானம் இன்று

 நட்டயீடான காப்புறுதி தொகை

விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்பதால் நட்டயீடான காப்புறுதி தொகையை வழங்க முடியாது உள்ளதாக விவசாய காப்புறுதி நிறுவன பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த முத்து சிவமோகன் குறிப்பிடுகையில், சுற்று நிருப்பத்தின் அடிப்படையில் பயிர்கள் மூன்றாக பிரிக்கப்படுகிறது. முதல் மாதம், பூப்பதற்கு முன்பதான காலம், பூத்த பின்னர் அறுவடை செய்யும் வரையான காலமாக மூன்றாக பிரிக்கப்படுகிறது.

தமிழர் பகுதிக்கு இரகசியமாக வந்த அமைச்சர்: விவசாயிகள் ஆதங்கம்! | Kilinochchi Farmers Aganist Minister Issuse

வெள்ளம் ஏற்பட்ட காலம் பூத்த பின்னரான காலம் என்பதால் அது மூன்றாவது நிலையில் உள்ளதாக கருதப்பட வேண்டும். இவ்விடயத்தை அதிபருக்கு கடிதம் மூலம் எழுதியதுடன், அதன் பிரதியை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி உள்ளேன்.

இந்த நிலையில், பூப்பதற்கு முன்பதான 2ம் நிலையில் பயிரழிவு மதிப்பீடு செய்யப்பட்டு நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை. அழிவடைந்த காலம் பூத்ததன் பின்னரான மூன்றாவது காலப்பகுதி ஆகும்.

இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் கிளிநொச்சி வருகை தந்தபோது அவரிடம் கூறவில்லையா என அமைச்சர் அவரிடம் வினவினார்.

தமக்கு அமைச்சர் வந்தது தெரியாது எனவும், அவ்வாறு அறிந்திருந்தால் நிச்சயம் அவரை சந்தித்து இப்பிரச்சினையை முன்வைத்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்த ரணில்

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்த ரணில்

காலபோக அழிவு

அமைச்சர் வந்ததை விவசாயிகளுக்கு கூறவில்லையா என கமநல சேவைகள் திணைக்கள அதிகாரியிடம் அமைச்சர் வினவினார்.

தமக்கும் தெரியாது எனவும், முதல் நாளே தமக்கு நிகழ்வு தொடர்பில் அறிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வருகையில் சிறு தவறு இடம்பெற்றுள்ளதாகவும், அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்து தீர்மானம் ஒன்றினை எடுப்போம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிக்கு இரகசியமாக வந்த அமைச்சர்: விவசாயிகள் ஆதங்கம்! | Kilinochchi Farmers Aganist Minister Issuse

சிறு போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலபோக அழிவு தொடர்பில் பயிரின் 3ம் நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலாளர்கள் ஒருவாரத்திற்குள் விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதாக தெரிவித்தமையை அமைச்சர் குறிப்பில் இடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், விவசாய காப்புறுதி நிறுவனம் பயிர் அழிவை 2ம் நிலையாக மதிப்பிட்டு வழங்க முடிவெடுத்து உள்ளமையால், விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற முடியாது உள்ளதாகவும், விவசாயிகள் மூன்றாம் நிலையிலேயே தமக்கு அழிவு ஏற்பட்டதாக கூறுவதால் கருத்து முரண்பாடான நிலை உள்ளதாகவும் கமநல சேவைகள் நிணைக்கள அதிகாரி கூறினார்.

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்

 விவசாயிகளிடம் விண்ணப்பங்கள்

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் பூத்த பின்னரான காலப்பகுதியாக மூன்றாம் நிலையை மதிப்பீடாக கருதி விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் வகையில் தீர்மானமாக எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் நட்டயீடுகள் கொடுத்து முடிந்திருக்கும். ஆனால் இங்கு பேச்சளவிலேயே உள்ளது. தீர்மானத்தை எடுத்து, விவசாயிகளிடம் விண்ணப்பங்களை பெறுங்கள். எவ்வாறு கொடுக்கலாம் என்பதை அமைச்சர் பேசி பெற்றுக் கொடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதிக்கு இரகசியமாக வந்த அமைச்சர்: விவசாயிகள் ஆதங்கம்! | Kilinochchi Farmers Aganist Minister Issuse

அந்த வகையில், வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்ட ரீதியாக பூத்த பின்னரான காலப்பகுதியான மூன்றாம் நிலையை விவசாய இழப்பீட்டு காலமாக கருத்தில் எடுத்து நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் சபையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரம்! இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ள இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்! இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ள இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024