8 ஆடம்பர மாளிகைகளை நிர்மாணிக்கும் கிம் ஜாங் உன்..! எதிரிகளை திண்டாட வைக்க அதிரடி நடவடிக்கை
North Korea
Kim Jong Un
By Kanna
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தலைநகர் பியோங்யாங்கிலுள்ள தனது சங்கவங்ஸன் வளாகத்தில் 8 ஆடம்பர மாளிகைகளை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் எதிரிகளை தான் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முடியாது திண்டாடச் செய்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர் இவ்வாறு 8 மாளிகைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஏற்கனவே 13 வசிப்பிடங்கள்
இந்த மாளிகைகளை நிர்மாணிக்கும் திட்டமானது வட கொரிய தலைமைத்துவம் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, கிம் ஜாங் உன் ஏற்கனவே மேற்படி தேவைப்பாட்டைக் கருத்திற் கொண்டு நாடெங்கும் 13 வசிப்பிடங்களை நிர்மாணித்துள்ளதாக அந்த அமைப்பின் ஆய்வு கூறுகிறது குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி