ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல
கலகொட அத்தே ஞானசார தேரர் தீவிரவாதம் குறித்துப் பேசியபோது, எந்த அரசாங்கமும் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகே அனைவரின் கண்களும் திறக்கப்பட்டன என்றும் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான வழக்கறிஞர் லக்ஸ்மன் கிரியெல்லா கூறினார்.
அந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவறைத்திருத்திய ரணில்
மேலும், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி அந்தத் தவறைத் திருத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேரரின் வெளிப்படுத்தல்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறிய கிரியெல்ல, சிஐடி மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் மௌனம் காத்ததாகவும், ஞானசார தேரர் கூறியது உண்மைதான் என்பதைப் பின்னர் அனைவரும் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
தேரர் வரம்பு மீறியது ஒரு தனி விஷயம்
தேரர் சில சமயங்களில் வரம்பு மீறியது ஒரு தனி விஷயம் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |