விராட்கோலியின் அநாகரிக செயல் : ஐசிசி எடுத்த கடும் நடவடிக்கை
மெல்போர்னில் இன்று(26) ஆரம்பமான அவுஸ்திரேலியா(australia) மற்றும் இந்திய(india) அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட சம்பவத்திற்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் சபை அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் சாம் கொன்டாஸ்(Sam Contas)தோளில் மோதி அவருடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தியதற்காக விராட் கோலிக்கு(Virat Kohli) கிரிக்கெட் அதிகாரிகள் போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்துள்ளதுடன், அவரது ஒழுக்காற்று சாதனையில் பனால்டி புள்ளியை சேர்த்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தோளில் மோதிய காணொளிகள்
போட்டியின் முதல் நாளின் 10வது ஓவரின் முடிவில், கோலி,அவுஸ்திரேலிய வீர் கொன்டாஸ் நின்ற இடம் வரை நடந்து செல்வதும், கொன்டாஸின் தோளில் மோதிய காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கொன்டாஸ் 65 பந்துகளில் இரண்டு சிக்ஸர், 06பவுண்டரிகள் அடங்கலாக வேகமாக 60 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.19 வயதான கொன்டாஸ் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த வீரர்.
முன்னாள் வீரர்கள் விசனம்
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி(Ravi Shastri), கோலியின் செயல் தேவையற்றது என கூறியுள்ளார்.
இதனிடையே, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்கும்(Ricky Ponting), அனுபவ வீரர் கோலிதான் மோதலை உருவாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல்நாள் ஆட்டநேரமுடிவில் அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |