கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு
                                    
                    Mullaitivu
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 20.11.2023 முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
அந்த வகையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆறாவது நாளாக இன்றும் (25) இடம்பெற்றது.
அகழ்வுப் பணிகள்
இன்றைய அகழ்வுப் பணியின் போது 5 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், துப்பாக்கிச் சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா தெரிவித்துள்ளார்.
மேலும் அகழ்வுப் பணிகள் நாளை(26) இடம்பெறாது எனவும் நாளை மறுதினம் (27) அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்