கொள்ளுபிட்டிய விபத்து: சாரதிக்கும் நடத்துனருக்கும் வழங்கப்பட்ட சலுகை
Colombo
Sri Lanka
Accident
By Shadhu Shanker
கொழும்பு கொள்ளுபிட்டிய கோர விபத்தின் பின்னர் குறித்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துனருக்கும் ஒருவார சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தானது நேற்றையதினம் (6) காலை 6 மணியளவில் இடம்பெற்றது, விபத்தில் 5 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
தீர்மானம்
குறித்த விபத்தின் பின்னர் இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் சாரதியையும் ஓட்டுனரையும் குறித்த சம்பவத்தின் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்