இலங்கை கலைஞர்களின் முயற்சியில் கூட்டாளி திரைப்படம்!
மட்டக்களப்பில்(Batticaloa) இயங்கிவரும் மீன்மகள் தயாரிப்பின் புதிய திரைப்படமான கூட்டாளி(Kootali) திரைப்படமானது எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
நேற்று (23.01.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மீன்மகள் தயாரிப்பின் இயக்குனர் இதனை தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படமானது கோடீஸ்வரனின் இயக்கத்திலும், பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடியின் கதையிலும், ஷரோனித் பிரேம்குமாரின் திரைக்கதை வசனத்திலும், ஏ. ஜே. சங்கர்ஜனின் இசையிலும் அலரின் கீட்ஸ் கென்னடியும் பவதாரும் பாடல்களிலும் உருவாகியுள்ளது.
கூட்டாளி திரைப்படம்
அத்துடன் அலன் கோல்ரிஜ் கென்னடி, குளோடியா ரதி, இதயராஜ், ஜீ. கென்னடி, விமோஷிகன், மற்றும் பல நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை மீன்மகள் தயாரிப்பு சார்பில் அனா கத்லீன் கென்னடி இப்படத்தினைத் தயாரித்துள்ளதுடன் ஜீ. புஷ்பகாந்த் படப்பிடிப்பாளராக செயற்பட்டுள்ளார்.
மீன்மகள் தயாரிப்பு ஏற்கனவே கலாட்டா பேரின்பச் சுற்றுலா எனும் வெற்றிப் படத்தினை சென்றவருடம் தயாரித்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |