உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட கோட்டாபய
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இவர் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிபிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மௌலானா (Azad Maulana) குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழு
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச, “தயவு செய்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் படியுங்கள், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட.
அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்
தற்போது, முன்னாள் அமைச்சர் பிள்ளையானின் (Pillayan) முன்னாள் இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானா, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அளித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின் முக்கிய சாட்சியான மௌலானா, விரைவில் சுவிட்சர்லாந்திலிருந்து (Switzerland) அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, கோட்டாபய ராஜபக்ச தன்னுடனும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே பிள்ளையானுடனும் இணைந்து செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |