காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் : யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna)- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் சில மாதங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி காவல்துறையினரால் இன்று (06) மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் BCN 8166 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளே மூன்று மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு காணாமல் போயிருந்தது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி