தமிழர்களால் மறந்துவிட முடியாத படுகொலை!! இன்று 36 ஆம் ஆண்டு நினைவுநாள்
ஈழத்தமிழர்களினால் இலகுவில் மறந்துவிட முடியாத தம்மினத்திற்கு எதிரான படுகொலைகளில் குமுதினிப் படுகொலையும் முக்கிய இடம் வகிக்கின்றது.
குமுதினி படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றைய தினம் நினைவுகூரப்படுகின்றது. கடந்த 1985 ஆம் ஆண்டு இன்றைய நாளைப் போன்ற ஒரு நாளில் தான் குமுதினி படுகொலை அரங்கேறியிருக்கின்றது.
குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த மக்களை வழி மறித்த ஸ்ரீலங்கா கடற்படை ஈவிரக்கமற்ற வகையில் குழந்தைகள் உட்பட 33 பேரை கொடூரமாக வெட்டியும் குத்தியும், அடித்தும் கொலை செய்திருந்தது.
கோடாரி, கத்தி, பொல்லுகளுடன் குமுதினி படகிற்குள் புகுந்த அரச பாதுகாப்பு தரப்பு எம் இனத்திற்கு எதிரான படுகொலையை கண்மூடி முழிப்பதற்குள் நிறைவேற்றியிருந்த துயரை இன்றும் எம்மக்கள் மறந்துவிடவில்லை.
காலங்கள் மாறினாலும் பட்ட காயங்கள் மாறாத ரணமாக இன்றும் ஈழத்தமிழினத்தின் மனங்களில் உழன்று கொண்டிருக்கின்றது.
கொரோனா பயணத் தடை காரணமாக இம்முறை குமுதினிப் படுகொலை நினைவேந்தல்கள் அனுஷ்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்