பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் "குறிஞ்சிச்சாரல் விழா 2023"

University of Peradeniya
By Beulah Nov 06, 2023 03:53 PM GMT
Report

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் "எட்டுத்திக்கும் எங்கள் கலை " என்ற தொனிப்பொருளில் குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது கண்டி இந்து கலாசார மண்டபத்தில் 05.11.2023( ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.01 மணியளவில் இடம்பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழ்ச்சங்க பெரும்தலைவருமான பேராசிரியர். எஸ். பிரசாந்தன், 97 வது செயற்குழு தலைவர் மு. வினோ தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஆர். மகேஸ்வரன் கலந்து சிறப்பித்துள்ளனர்.

தமிழர்களை எதிர்க்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமிழர்களை எதிர்க்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறப்பு அதிதிகள்

அத்துடன், சிறப்பு அதிதிகளாக முன்னைநாள் பேராதனைப் பல்கலைக்கழகத் புவியியல் துறைத் தலைவரும் தமிழ்ச்சங்க மேனாள் பெரும்பொருளாளருமான பேராசிரியர். வை. நந்தகுமார், முன்னைநாள் தமிழ்த் துறை தலைவரும்,தமிழ்ச்சங்க பெருந்தலைவருமாகிய பேராசிரியர் துரை. மனோகரன் மற்றும் முன்னைநாள் முதுநிலை விரிவுரையாளரும் தமிழ்ச்சங்க முன்னைநாள் பெரும்பொருளாளருமான திரு. வ. தர்மதாசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள், சிரேஸ்ர விரிவுரையாளர்கள் உட்பட கண்டியின் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் "குறிஞ்சிச்சாரல் விழா 2023" | Kurinchicharal Festival 2023 Peradeniya Sl

இதன் போது கீர்த்தனாஞ்சலி, சங்க கால ஐவகை நிலங்களின் குணாம்சங்களை வெளிப்படுத்தி சங்க நிலச்சங்கம நடனம், இசைச்சாரல், மண் வாசனை நடனம், சொற்போர், நாடகம் என பல்வேறு முத்தமிழ் நிகழ்ச்சிகள் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் அரங்கேற்றப்பட்டதுடன் கண்டி திரித்துவக் கல்லூரி மாணவர்களின் சத்தியவான் சாவித்திரியின் கதையினை மையப்படுத்திய வில்லுப்பாட்டும், மோப்ரே கல்லூரியின் இசைக்கானமும், விஹாரமகாதேவி கல்லூரியின் அம்மன் நடனமும், இந்து மாமன்றம் கண்டி அறக்கட்டளை மாணவர்களின் வீணைக்கச்சேரியும், கண்டி, கலசமர்ப்பணா ந்ருத்யக்க்ஷேத்ரா மாணவியின் சிவதாண்டவம் என பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தது.

சிறப்பு விருதான சங்கச்சான்றோர் விருது

இவ் நிகழ்வின் சிறப்பு விருதான சங்கச்சான்றோர் விருது இம் முறை மலையக மூத்த எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இவர் இதுவரையில் 12 நூல்கள்,95 சிறுகதைகள்,இரண்டு தமிழ் நாவல்கள், மற்றும் ஒரு ஆங்கில நாவலையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் "குறிஞ்சிச்சாரல் விழா 2023" | Kurinchicharal Festival 2023 Peradeniya Sl

குறிஞ்சிச் சாரல் நிகழ்வு இதுவரையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, ஹட்டன், கொழும்பு, கண்டி என பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் 2017 ற்கு பிறகு கடந்து சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்ற குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது இம் முறை கண்டி மாநகரில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

சிறிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சிறிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022