கொழும்பிற்கு மீண்டும் ஆரம்பமாகும் வெளிநாட்டு விமான சேவை!
குவைத் நாட்டின் தேசிய விமான நிறுவனம் குவைத் ஏர்வேஸ், கொழும்பிற்கு தனது வர்த்தக விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் குறித்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் நோக்கம்
அத்துடன், வாரத்திற்கு நான்கு விமானங்கள் என ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பயணிகளுக்குப் பிரபலமான சுற்றுலா இலக்காகக் கருதப்படும் கொழும்பிற்கு விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதே இந்தத் தீர்மானத்தின் நோக்கம் குவைத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவை
மேலும், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்து அதிகமான பயண விருப்பங்களை வழங்குவதே நிறுவனத்தின் அர்ப்பணிப்பு எனவும் நிறுவனம் னது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1953ஆம் ஆண்டு Kuwait National Airways Limited என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், 1954 மார்ச் மாதம் முதல் தனது சேவைகளைத் தொடங்கியது.
1962ஆம் ஆண்டு குவைத் அரசு நிறுவனத்தின் முழுமையான உரிமையைப் பெற்றதன் மூலம் இது அந்நாட்டின் தேசிய விமான சேவையாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
