மற்றுமொரு போராட்ட செயற்பாட்டாளர் கைது
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lanka
By Sumithiran
லஹிரு வீரசேகர கைது
போராட்ட செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமது கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடரும் கைதுகள்
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகைக்குள் அத்துமீறி உட்புகுந்தனர் எனத் தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே உட்பட மூவர் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

