மலையக மக்களுக்கான காணி உரிமை : அநுர அரசுக்கு ஜீவன் சவால்
காணி உரிமை வழங்காமல் மலையக மக்களுக்கு எத்தனை வீடுகளை அமைத்துக்கொடுத்தாலும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம் நேற்று (22.02.2025) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றும் போதே நாடாளமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ருபா வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அன்று 1700 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தபோது ஜீவன் தொண்டமான் காட்டிக்கொடுத்துவிட்டார்.
நாங்கள் 2,138 ரூபா பெற்றுக்கொடுப்போம் என அன்று எதிர்க்கட்சியில் இருந்த அனைவரும் தெரிவித்தார்கள். இப்போது ஜனாதிபதி 1,700 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தபோது அதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.இது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 1,700ரூபா சம்பளம் 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் 350 ஊக்குவிப்பு கொடுப்பனவும் என்ற அடிப்படையிலாகும். ஆனால் ஜனாதிபதியோ யாராக இருந்தாலும் முடிந்தால் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அடிப்படை சம்பளத்துக்கு ஒரு ரூபா அதிகரித்து காட்டுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் கீழ் உள்ள காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்