இந்தோனேசியாவில் மண்சரிவு : 12 பேர் காணாமல் போயுள்ளனர்
                                    
                    Indonesia
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமத்ரா தீவில் பெய்த கனமழை காரணமாக மண், பாறைகள், மரங்கள் ஆகியவை உயரமான பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டு ஆற்றுக்குள் விழுந்ததால் அதன் கரை உடைந்து மலையடிவார கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
12 பேர் மாயம்
இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் 12 பேரைக் காணவில்லை எனவும் அவா்களைத் தேடும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் 12 வீடுகள், ஒரு தேவாலயம், ஒரு பாடசாலை ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 50 குடும்பங்களைச் சேர்ந்தோர் இடம்பெயர்ந்து அரசின் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்