3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி (Galle) மாவட்டத்தின் நெலுவ (Neluva), எல்பிட்டிய (Elpitiya), நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை (Kalutara) மாவட்டத்தின் ஹொரணை ( Horana), மதுகம (Madhukama)மற்றும் மாத்தறை (Matara) மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்
இதேவேளை, கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நேற்று (16) மாலை ஆறு மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |