புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க 'லங்கா ஐஓசி'க்கு அனுமதி
Sri Lanka Economic Crisis
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Vanan
50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அனுமதி
இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
குறித்த புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாடளாவிய ரீதியில் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான செயல்திறன் பதிவு
இதற்கிடையில், லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் 2022 ஜூன் 30 இல் முடிவடைந்த காலாண்டில் வருவாய் மற்றும் இலாபங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடியிலிருந்து உருவாகும் செயல்பாட்டு சவால்கள் இருந்தபோதிலும் வலுவான செயல்திறன் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்