அத்தியாவசிய பொருட்களின் விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியானது புதிய விலைப் பட்டியல்!
இலங்கையில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று முதல் நடைமுறையாகும் வகையில், சதொச நிறுவனம் 7 பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன் பழைய மற்றும் புதிய விலைகளின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
1 கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 339 ரூபா.
புதிய விலை
1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 218 ரூபா.
1 கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1500 ரூபா.
உள்ளூர் சிவப்பரிசி 1 கிலோகிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 155 ரூபா.
கோதுமை மாவின் விலை
1 கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 230 ரூபா.
1 கிலோகிராம் உள்ளூர் நாட்டரிசி 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை 188 ரூபா.
பெரிய வெங்காயம் 1 கிலோ 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை 129 ரூபா என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
