இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்! இலங்கையில் குவியும் வெளிநாட்டு பயணிகள்
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும், ஓகஸ்ட் மாதத்தின் 01 ஆம் திகதி முதல்23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 31,105 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் இதுவரையில் 4,89,775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையின் சுற்றுலாத்துறை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரஜைகள் தமது விடுமுறைகளை கழிப்பதற்காக இலங்கைக்கு தமது சுற்றுலாப்பயணங்களை வருடாவருடம் மேற்கொள்கின்றனர்.
எனினும், உலகளாவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாத்தொற்றுக்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடி போன்றன இலங்கையின் சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்திருந்தது.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது.
அந்நியசெலாவணிகளின் புழக்கம்
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மற்றும் கொரோனாத் தொற்றின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன.
அதேவேளை, இந்த சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் நாட்டில் அந்நியசெலாவணிகளின் புழக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

