தமிழரசுக் கட்சியின் நான்கு உறுப்பினர்களால் உயிர் அச்சுறுத்தல் : அம்பலமான தகவல்
தமிழரசுக் கட்சியின் நான்கு உறுப்பினர்களால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பிரதேச சபை உறுப்பினர் அற்புதராஜா தனுஷன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நேரடியாக போட்டியிட்டு, வட்டார பிரதேச சபை உறுப்பினராக அற்புதராஜா தனுஷன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் தெரிவில் போது தமது அதிருப்தியினை அற்புதராஜா தனுஷன் உட்பட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நால்வர் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனடிப்படையில் தற்போது குச்சவெளி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர், தனக்கு இந்த தமிழரசுக் கட்சியின் நான்கு உறுப்பினர்களால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறித்த நால்வரும் சபைக்கு வந்தால் தனக்கு ஆபத்து என்று கூறி புல்மோட்டைப் காவல்நிலையத்தில் முறைபாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் அற்புதராஜா தனுஷன் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்விதம் மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்கள் இனியும் தொடருமா என பிரதேச சபை உறுப்பினராகிய அற்புதராஜா தனுஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த விடயங்களை கீள் உள்ள இணைப்பில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
